அமெரிக்க அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த பின், ஜோ பைடன் முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது பேசிய அவர், ஜோதியை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். தன் கையில் இருக்கும் ஒளியை நாட்டை ஒருங்கிணைக்க இளைஞர்களுக்கு வழங்க வேண்டிய நேரம் இது எனவும், இதன் மூலம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் எனவும் கூறினார். மேலும், அனைத்தையும் விடவும் நாட்டின் ஜனநாயகம் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைமுறைக்கு ஒளியை வழங்குவதே சிறந்த வழி என்று நான் முடிவு செய்துள்ளேன். அதுவே நமது தேசத்தை ஒன்றிணைக்க சிறந்த வழி” என்று கூறிய பைடன் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை வேட்பாளராக முன்மொழிந்துள்ளார்.