சமூக வலைதளங்கள், போலி இணையதளங்கள் போன்றவற்றில் வெளியாகும் வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், சந்தேகத்திற்கிடமான செயல்பாடு ஏதேனும் இருந்தால் சைபர் கிரைம் https://cybercrime.gov.in அல்லது 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.