ஈரோடு கருப்பண்ணசாமி கோயில் வீதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான முரளி (26) கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வராததால் பதறிப்போன அவரது மனைவி வித்யா தனது கணவனை தேடியிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று காலை சாஸ்திரி நகர் அருகே ரயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் முட்புதரிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அங்கு பார்த்தபோது கழுத்தில் பீர் பாட்டில் குத்தப்பட்ட நிலையில் முரளி இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முரளியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.