சரியாக செயல்படாத நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என்று இபிஎஸ் எச்சரித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வருகின்றார். அதன்படி திருப்பூர் மற்றும் கடலூர் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் வெல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.