வாக்கு சீட்டு முறையை இந்தியாவில் அமல்படுத்த வேண்டும் என ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் கூட வாக்குச் சீட்டு முறையே பயன்படுத்தப்படுகிறது.
மேலும் ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்த இந்தியாவும் அதை நோக்கி நகர வேண்டும் என்றார். சமீப காலமாக அரசியல் தலைவர்கள் பலரும் வாக்குச்சீட்டு முறைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.