ஏடன் வளைகுடாவில் பயணித்த இஸ்ரேலின் எம்.எஸ்.சி., யுனிஃபிக் கப்பல் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். காசாவின் அல்-மவாசியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 141 பேர் உயிரிழந்தனர். இந்தப் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில், இஸ்ரேல் கப்பல் & ஈலாட்டில் உள்ள ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் தொடுத்ததாக ஹவுதியின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரீ தெரிவித்துள்ளார்.