காசாவின் அல்மவாசி குடியிருப்புகளின் மீது கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 141 பேர் பலியாகி உள்ளனர். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான ரீப் போர் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருவதால் காசா மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இதுவரை காசா பகுதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,584 ஆக உயர்ந்துள்ளது. 88,800 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.