தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கி துறை ரீதியிலான கோரிக்கைகள், அதன் மீதான விவாதங்கள் தொடர்ந்து தற்போது நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று நடந்த கூட்டத் தொடரில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இ-சேவை மையங்கள் குறித்து பேசினார். அப்போது, “இ-சேவை மையங்களை 20 ஆயிரத்தில் இருந்து 35ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்களுக்கு தகுதி கண்டறிந்து இ-சேவை மையத்தை தொடங்க ஏற்பாடு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.