எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் பேச்சு எரியும் நெருப்பில் குளிர்காய்வது போல இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். மருந்து மருத்துவமனைகளில் கையிருப்பு இல்லை என்ற இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், 4.42 கோடி மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இபிஎஸ் பேச்சு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.