மறந்து சில இடங்களில் ஜிமெயில் சேவையை நீங்கள் log out செய்யாமல் வந்திருந்தால் பிறர் அதனை பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க ஜிமெயில் சில வசதிகளை வழங்குகிறது. G-mail பக்கத்தில் மேலே புகைப்படம் இருக்கும் இடத்தை அழுத்தினால் click message your Google account என்று வரும். அதனை அழுத்தினால் வரும் click Security க்குள் சென்றால் எத்தனை உபகரணங்களில் உங்கள் ஜிமெயில் உள்ளது என்பது தெரியும். அதை பயன்படுத்தி நீங்கள் log out செய்யலாம்.