உங்கள் பிள்ளையின் கூச்ச உணர்வை நினைத்து உங்களுக்கு கவலையாக உள்ளதா? இது போன்ற பிள்ளைகளின் மனநிலையை கட்டாயமாக நம்மால் மாற்ற இயலும். அதற்கான சில டிப்ஸ் இதோ.
அதாவது முதலில் உங்கள் குழந்தைகளை ‘கூச்சப்படுபவர்கள்’ என்று முத்திரையிட வேண்டாம். கூச்ச சுபாவமுடைய பிள்ளையின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டும்.
சமூகத்தில் பிற நபர்களோடு உங்கள் குழந்தை இருக்கும் பொழுது அவர்களை தனியாக விட்டு செல்லாமல் அவர்களுக்கு பக்கத்தில் பக்கபலமாக இருங்கள். அனைத்தையும் சரி செய்வதற்கு உங்கள் பிள்ளைக்கு நீங்கள் போதுமான அளவு நேரம் கொடுக்க வேண்டும்.