சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில், அதற்கு மகாதேவனையும், ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர சிங்கையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.