சுய சான்று அடிப்படையில் ஆன்லைன் முறையில் உடனடி கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டண விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சிகளில் சதுர அடிக்கு எவ்வளவு கட்டணம் என்பதை பார்க்கலாம். சென்னை ₹100, கோவை, திருப்பூர், மதுரை ₹88, சேலம், திருச்சி ₹84, நெல்லை, வேலூர், தூத்துக்குடி, ஈரோடு ₹79, தஞ்சை, நாகை, ஓசூர், கடலூர், கரூர், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் ₹74 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.