BSNL சிம்களை 4ஜிக்கு மேம்படுத்துமாறு நிர்வாகம் பயனர்களை அறிவுறுத்தியுள்ளது. சிலர் தங்களுடைய நெட்வொர்க்கில் 4ஜியை அறிமுகப்படுத்திய போதிலும் 2ஜி, 3ஜி சிம்களைப் பயன்படுத்துகின்றனர். அதனால் அவர்களுக்கு நெட்வொர்க் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம்/சில்லறை விற்பனையாளரிடம் அடையாளச் சான்றுகளை வழங்கி புதிய சிம்களை இலவசமாகப் பெறலாம். உங்களின் சிம் வகையை அறிய, மொபைலில் இருந்து ‘சிம்’ என டைப் செய்து 54040க்கு மெசேஜ் அனுப்பவும்.