உடல் உறுப்பு தானம் செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு 42 நாள்கள் சிறப்பு விடுப்பு அளிக்க இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்துடன் ஆலோசித்து வருவதாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், பரிந்துரையின்படி உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களின் பொதுநலன் கருதி விடுப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.