உதயநிதி வருகைக்குப் பிறகு, திமுகவுக்கு வெற்றிமேல் வெற்றி குவிந்து வருவதாக ஆர்.எஸ்.பாரதி புகழ்ந்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சியால் இந்த வெற்றி உறுதி செய்யப்பட்டது என்றார். மேலும், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் திமுக வெற்றி பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.