கேரளாவில் கூகுள் மேப் உதவியுடன் காரில் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டிருந்த இருவர், ஆற்றில் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் ஆற்றில் அடித்துச் சென்ற நிலையில், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த மரக்கிளையில் சிக்கிக் கொண்டது. பிறகு, தீயணைப்புத் துறையினர் அவர்களை போராடி மீட்டனர். கூகுள் மேப்பில் காட்டிய பாதையை பின் தொடர்ந்த போது, ஆற்றில் கார் சிக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்