அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கடந்த 14ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் ரகசிய பாதுகாப்பு படை இயக்குநர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், டிரம்ப் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பொதுவெளியில் அரசியல் பேரணிகளில் பங்கேற்க வேண்டாம் என ரகசிய பாதுகாப்பு படை அறிவுறுத்தியுள்ளது