தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கொடுக்க தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். தமிழகத்தில் புதிதாக 10 ஆயிரம் கால்நடை பண்ணைகள் அமைக்க கடன் உதவி வழங்கப்படுகிறது. அதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரித்து நாமும் உலக சந்தையில் பால் விற்க முடியும் என்றார். மேலும் ஆவின் மூலம் விவசாயிகளிடமிருந்து நிரந்தரமான ஒரே விலையில் பால் கொள்முதல் செய்கிறோம் என்றும் கூறியுள்ளார்.