உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஒரு நாள் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களில் இதுவரை 52 போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 95 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும் 2 மற்றும் 3வது இடங்களில் லசித் மலிங்கா (94), ஷகிப் அல் ஹசன் (92) ஆகியோர் உள்ளனர்.