சிங்கப்பூர் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடாக உள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ், ‘உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்’ என்ற புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. விசா இல்லாத 58 மதிப்பெண்களுடன் இந்தியா பட்டியலில் 82வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட இந்தியா 3 இடங்கள் முன்னேறியுள்ளது. மேலும் நமது அண்டை நாடான பாகிஸ்தான் 100வது இடத்தில் உள்ளது.