உலகின் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலை மெர்சர் நிதி ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மக்களின் வாழ்க்கை செலவினம் அடிப்படையிலான பட்டியலில் முதலிடத்தில் ஹாங்காங் உள்ளது. சிங்கப்பூர், சூரிச் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்திய நகரங்களை எடுத்துக் கொண்டால் 136-வது இடத்தில் மும்பை உள்ளது. இதனை தவிர டெல்லி (165), சென்னை (189), பெங்களூரு (195), ஹைதராபாத் (202), புனே (205), கொல்கத்தா (207) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.