ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமானதாக கருதப்படும் செனாப் ரயில்வே பாலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும் அதில் ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று அதிகாரிகள் அந்த பாலத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின் அங்கு ரயில்கள் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் விரைவில் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.