ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள செல்வ செழிப்பான நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாக திகழ்கிறது. இந்த நாடு உலகிலேயே அதிகபட்சமாக மூன்று தலை நகரங்களைக் கொண்ட நாடாக உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நிர்வாக வசதி சரிசமமாக பிரிந்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்படி அந்த நாட்டின் தலைநகரங்களாக பிரிட்டோரியா, கேப்டவுன், புளூம்பொன்டின் ஆகிய நகரங்கள் செயல்படுகின்றன.