உலக செஸ் சாம்பியன்ஷிப் சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை 14 சுற்றுகளாக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் போட்டி நடத்த விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இந்திய செஸ் கூட்டமைப்பும் டெல்லியில் நடத்த மனு செய்திருந்த நிலையில் சிங்கப்பூரில் போட்டி நடைபெறுகிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரனுடன் மோதுகிறார் இந்திய வீரர் குகேஷ்.