புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசிப்பதால் தொற்று ஏற்பட்டு, நுரையீரல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பு ஒரே நாளில் ஏற்படாது. முதலில் ஆலர்ஜியாகவும், பிறகு உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து, மூச்சு திணறலும் ஏற்படும். மூச்சு திணறலுக்கு பிறகும் அலட்சியம் காட்டினால், மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வீட்டில் பறவைகளை வளர்ப்போர், கவனமாக இருப்பது நல்லது