வெப்பத்தில் இருந்து தப்ப ஏசியை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால், அதன் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2023இல் 11 லட்சம் ஏசி விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் 15 லட்சம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல் தேவை அதிகரித்த நேரத்தில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளதால், ஏசி விலையை முன்னணி நிறுவனங்கள் 6%-8% வரை அதிகரித்துள்ளன.