உ.பி அரசின் நிர்வாகத் தோல்வியே ஹத்ராஸ் உயிரிழப்புகளுக்கு காரணம் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் தவறான நிர்வாகம் காரணமாகவே 121 பேர் பலியாகியுள்ளதாகவும், தனது தோல்வியை மறைப்பதற்காகவே அதிகாரிகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஹத்ராஸ் சம்பவத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.