உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் பதவியை, பூபேந்திர சவுத்ரி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உ.பி., முதல்வர் யோகி, துணை முதல்வர் கேசவ பிரசாத் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பூபேந்திர சவுத்ரி திடீரென ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.