தமிழகம் முழுவதும் ஊரகப்பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொதுமக்கள் தினசரி அணுகும் அரசு துறைகளில் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வகையில் கடந்தாண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலமாக 8.74 லட்சம் மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த திட்டம் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.