அசாம் மாநிலம் போங்கைகானில், காந்தி தாம் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் தீயை அணைத்தனர். ரயிலின் பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.