ஜம்மு-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காசுபேகு ரயில் நிலையத்தில் போலீசார் ரயிலை நிறுத்தினர். இதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் அங்கு வந்து ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு ஏதும் இல்லாததை கண்டு பயணிகளும், போலீசாரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.