பலருக்கு அவர்களுடைய சிலிண்டர் இணைப்பு பில் செலுத்தப்படவில்லை என எஸ்எம்எஸ் வருகிறது. மேலும் சிலிண்டர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தப்படுகிறது. அந்த மெசேஜில் உங்களது இணைப்பை புதுப்பிக்க இந்த நம்பருக்கு கால் செய்யவும் என்று ஒரு எண்ணும் கொடுக்கப்படுகிறது. இது முற்றிலும் பணம் பறிக்கும் செயல் என அரசு எச்சரித்துள்ளது. உங்களுக்கு இது போன்ற மெசேஜ் வந்தால் அதனை தவிர்த்து விடவும் என்று கூறப்பட்டுள்ளது.