விஷச்சாராய உயிரிழப்பை வைத்து கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி கபட நாடகமாடுகிறார் என்று கருணாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கியபோது பழனிசாமி ஒருநாளும் போராட்டம் நடத்தவில்லை. தூத்துக்குடியில் போராடியவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு, டிவியில் பார்த்துதான் தெரியும் என சொன்னவர் பழனிசாமி. பேரவையில் பல்வேறு மக்கள் பிரச்சனைக்கு மவுனமாய் இருந்த எடப்பாடி இன்று கள்ளக்குறிச்சிக்கு காவடி ஆடுகிறார் என கூறியுள்ளார்.