சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையில் எடுத்த அதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சட்டப்பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் விதிகள் தெரிந்தும் எதிர்க்கட்சிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.