மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசுவது கேட்கக் கூடாது என்பதற்காக மைக்கை சபாநாயகர் ஓம் பிர்லா அணைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் விளக்கமளித்து பேசிய ஓம் பிர்லா, சில எம்பிக்கள் தான் மைக்கை அணைத்து விட்டதாக குற்றம்சாட்டுவதாகவும், ஆனால் அதுபோல அணைக்கவில்லை என்றும், மைக்கை கட்டுப்படுத்தும் சுவிட்ச் தன்னிடம் கிடையாதென்றும் தெரிவித்தார்.