சன் டிவியில் இரவில் 9 மணிக்கு ஒளிபரப்பாகி சக்கை போடு போட்ட எதிர்நீச்சல் சீரியல் அண்மையில் நிறைவடைந்தது. இதனையடுத்து எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருப்பதாகவும், அது சன் டிவிக்கு பதிலாக வேறு டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து அந்த தொடரில் நாயகியாக நடித்த மதுமிதாவிடம் கேட்டபோது, எதுவும் இன்னும் உறுதியாக வில்லை என பதிலளித்தார்.