சினிமா வாழ்க்கையில் தான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். வருடத்திற்கு தனது இரண்டு படங்கள் வெளியாக ஆசைப்பட்டதாகவும் கடவுளின் அருளால் கடந்த நான்கு ஆண்டுகளில் 11 படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக பிங்க் படத்திற்கு பிறகு அதே சாயலில் வந்த நிறைய வாய்ப்புகளை மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.