திரைத்துறையில் இன்று பயன்படுத்தப்படும் ‘கிராபிக்ஸ்’ தொழில்நுட்பங்களை அந்தக் காலத்திலேயே கம்பர் எழுத்தில் காட்டியிருப்பதாக இயக்குநர் பாக்கியராஜ் புகழாரம் சூட்டியுள்ளார். ‘கம்பன் எனும் கதை மன்னன்’ என்ற தலைப்பில் பேசிய அவர், கம்பனின் ‘ஸ்கிரிப்ட்’ வலுவானது. அதனால்தான் எத்தனை படங்கள் எடுத்தாலும், அக்கதை வெற்றி பெறுகிறது. கதாபாத்திரங்களை விவரிக்கும் அவரது எழுத்து பிரம்மாண்டமானது எனப் பாராட்டியுள்ளார்.