கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் தற்போது கனமழை புரட்டியெடுத்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வரும் நிலையில், தெற்கு எத்தியோப்பியா மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இதுவரை 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் போலீசார் அடங்குவர்.