புதுச்சேரி அரசு எந்த நேரத்திலும் கவிழும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் இடையே நடக்கும் மோதலை வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்போம் என்ற அவர், அரசை தவிர்க்க காங்கிரஸ் கட்சி எந்த முயற்சியும் செய்யாது என்றார். பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் இடையே தொடர் மோதல் நீடிக்கும் சூழலில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக அமைச்சரின் துறையை முதல்வர் ரங்கசாமி மாற்றி உள்ளார்.