தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். தலைவர்களை கொலை செய்துவிட்டு பெயர் வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் ரவுடிகள் சுற்றி தெரிவதாக கூறிய அவர், சீமான், கிருஷ்ணசாமி மற்றும் திருமாவளவன் உள்ளிட்டவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மீண்டும் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.