அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த 8 மாதங்களில் தன்னை கொல்ல 2 முயற்சிகள் நடந்ததாக, தொழிலதிபர் எலான் மஸ்க் அதிர்ச்சிகர தகவலை தனது x தளத்தில் பகிர்ந்துள்ளார். டெக்சாஸில் உள்ள டெஸ்லா தலைமையகத்தில் இருந்து சற்று தொலைவில் அவர்கள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.