பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தன்னையும் தன் குடும்பத்தினரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். மும்பை போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், தனது (பந்த்ரா) வீட்டின் வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக பிஷ்னோய் கும்பல் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததாகவும், ஏற்கெனவே பலமுறை பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.