சென்னை ரசிகர்கள் அளித்த ஆதரவு இந்திய பெண்கள் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது என்று வீராங்கனை ஸ்ரேயாங்கா பாட்டீல் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை ரசிகர்களே, நீங்கள் அளித்த ஆதரவு நாங்கள் எதிர்பாராதது. பெரிய திரையில் என்னை காண்பிக்கும் போதெல்லாம் நீங்கள் கொடுத்த ஆதரவால் நான் வெட்கமடைந்தேன், பேரன்புக்கு எனது நன்றிகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.