அரசின் உத்தரவுகளை ராணுவம், வீரர்கள் பின்பற்ற தேவையில்லை என கூறப்பட்டதால் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதாக
சிவசேனா (UBT) எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அச்சூழலில் பிரதமராக வாஜ்பாய் இருந்திருந்தாலும் அதையே செய்திருப்பார் எனவும், பாலாசாஹேப் தாக்கரேவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் எமர்ஜென்சியை வரவேற்றதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இது தேச பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.