இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எமர்ஜென்சியை அமல்படுத்தியது என குறைக்கூற போகிறீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். எமர்ஜென்சியை அமல்படுத்தி 50 ஆண்டுகள் ஆகிறது என பிரதமர் மோடி கூறியது தொடர்பாக பேசிய கார்கே. இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தியது உண்மைதான் என்றும், இப்போது, மோடி ஆட்சியில் நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நீடிப்பதாகவும் சாடியுள்ளார்.