எம்ஜிஆர் போல் விஜய்யும் மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார், விஜய் அதிமுகவுடன் கூட்டணிக்கு வந்தால் நல்லது தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், நடிகர் விஜய்யின் தவெக உடன் அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து பொதுச் செயலாளர் தான் முடிவு எடுப்பார். மதவாதத்தை முன்வைக்கும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்து போட்டியிடும் என அவர் தெரிவித்துள்ளார்.