திமுக தரப்பில் 4 பேரையே மாநிலங்களவைக்கு எம்பியாக அனுப்ப முடியும். அதில் ஒரு இடத்தை கமலுக்கு தருவதாக திமுக உறுதியளித்துள்ளதாகவும், அப்துல்லா, வில்சனும் எம்பி பதவியில் தொடர் முயற்சிப்பதாகவும் தெரிகிறது. மறுபுறம் ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவனும் காய் நகர்த்துவதாக கூறப்படுவதால், திமுக வாக்குறுதிபடி, தனக்கு எம்பி பதவி கிடைக்குமா என வைகோ பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.