விருதுநகர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு விஜய பிரபாகரன் நேரில் நன்றி தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், “உங்க முன்னாடி எம்.பி.யா வரனும்னு நெனச்சேன், ஆனா, இப்போ விஜய பிரபாகரனா வந்து நிக்குறேன்” என்றார். வெற்றி வாய்ப்பு இல்லை என்றாலும், தொகுதி மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்ற அவர், வெற்றி நிச்சயம் நம்மை தேடி வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.